வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 டிசம்பர் 2022 (18:01 IST)

தலைமை ஆசிரியரை கட்டி வைத்து உதைத்த பள்ளி மாணவிகள் மாணவிகள்..! அதிர்ச்சி சம்பவம்

beat
தலைமை ஆசிரியரை மாணவிகள் அனைவரும் சேர்ந்து கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா என்ற பகுதியில் தனியார் கல்லூரி விடுதி ஒன்றில் மாணவி தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த கல்லூரியின் தலைமை ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது
 
இது ஒரு தகவல் தெரிந்தவுடன் சக மாணவிகள் ஒன்று சேர்ந்து தலைமை ஆசிரியரை கயிறால் கட்டி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் தலைமையாசிரியர் மது போதையில் இருந்ததாகவும் தெரிய வந்தது.
 
இந்த நிலையில் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
Edited by Mahendran