புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 5 ஜூன் 2019 (12:11 IST)

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – ஒரே நேரத்தில் இரண்டு கல்யாணம்.

ஈரோடு தாராபுரம் அருகே வாலிபர் ஒருவர் மீது இரண்டு பெண்கள் ஆசைப்பட்டதால் இருவரையுமே அவர் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் பகுதியை சேர்ந்த 26 வயது ஆட்டோ டிரைவர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க விதவை பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். அவர்களது நட்பு பின்னாளில் காதலாக மலர்ந்துள்ளது. அதேசமயம் அந்த ஆட்டோ டிரைவருக்கு 19 வயது இளம்பெண் ஒருவருடனும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அந்த பெண்ணும் இவரையே காதலித்து வந்துள்ளார். இருவரையும் ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார் இளம் ஆட்டோ டிரைவர்.

இந்நிலையில் ஆட்டோ டிரைவரின் இருபக்க நாடகம் இரண்டு பெண்களுக்கும் தெரிந்துவிட்டது. ஏன் ஏமாற்றினாய் என ஆட்டோ டிரைவரின் காலரை பிடிக்க வேண்டிய பெண்கள், அவனுக்காக சண்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இருவருக்குமே அவரை விட்டுத்தர மனம் இல்லாததால் இருவருமே அவரை திருமணம் செய்து கொள்வோம் என ஒருமனதாக முடிவெடுத்தனர்.

இதைத்தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியேறிய இரண்டு பெண்களும் டிரைவரோடு சேர்ந்து ஒரு கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். அதற்கு பிறகு இருவரோடும் சேர்ந்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் அந்த வாலிபர். இந்நிலையில் காணாமல் போன பெண் குறித்து பெண்வீட்டார் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஒரு பேருந்து நிறுத்தம் அருகே மூவரும் பேசி கொண்டிருப்பதை பார்த்து விசாரித்த போலீஸாருக்கு மேற்சொன்ன சம்பவம் தெரிய வந்திருக்கிறது. இரண்டு பெண்களின் உறவினரும் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். உறவினர்கள் அழைத்தும் இரண்டு பெண்களும் போக மறுத்து வாழ்ந்தால் அவரோடுதான் வாழ்வேன் என விடாப்பிடியாக இருந்திருக்கின்றனர். வேறு வழியில்லாமல் உறவினர்களும் சென்றுவிட, இரண்டு மனைவிகளையும் அழைத்து கொண்டு கிளம்பியிருக்கிறார் அந்த வாலிபர்.