சமூக ஊடங்கள் எங்களை கொல்லப் பார்க்கிறார்கள்- திஷா சாலியன் பெற்றோர்

disha salian
sinoj| Last Modified சனி, 8 ஆகஸ்ட் 2020 (19:28 IST)

சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக
சுஷாந்தின் மேலாளர் திஷா சாலியன் மும்பையில் 14 வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை.


இதற்கு பல்வேறு காரணம் கூறப்பட்ட நிலையில், போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆஜ்தக் என்ற செய்தி நிறுவனத்திற்கு
பேட்டியளித்துள்ள திஷா சாலியன் பெற்றோர், எங்களுடைய ஒரே மகளை நாங்கள் இழந்து தவித்து வருகிறோம். ஆனால் சமூக வலைதளங்களும், ஊடங்களும் தவறான செய்திகளைப் பரப்பி எங்களைக் கொல்லப் பார்க்கிறார்கள் எனவும் பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :