அமெரிக்க அதிபரின் சமூக வலைதள கணக்குகளுக்கு உலை வைத்த ஃபேஸ்புக் டுவிட்டர்
அமெரிக்கா நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் உலகையே ஆட்டுவிக்கும் வல்லமையும் அதிகாரமும் கொண்டவர். அப்படியிருக்க அவரது டுவிட்டர் கணக்கை ஃபேஸ்புக் டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் டிரம்ப் போட்டியிடுகிறார். ஆனால் 29 % அமெரிக்கர்கள் கொரொனா விவகாரத்தில் அவருக்கு எதிராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
இந்நிலையில், தனது தேர்தல் பிரச்சார டுவிட்டர் கனக்கில், ஒரு வீடியோவை டிரம்ப் பதிவிட்டிருந்தார். அதில், குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி உள்ளதால் பள்ளிகள் திறக்கலாம் என கூறியிருந்தார்.
மேலும், வீட்டிலுள்ளவர்களுக்கு குழந்தைகள் கொரொனாவைக் கொண்டுசெல்ல மாட்டார்கள் தெரிவித்திருந்தார். இதற்கு மருத்துவ நிபுணர்கள் அதிபர் கூறியது தவறு என்று கூறினர்.
இந்நிலையில், தவறான பதிவை நீக்கினால் மட்டுமே டிரம்பின் டுவிட்டர் கணக்கை மிண்டும் இயக்க முடியும் என டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.