1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (08:55 IST)

இந்திய ராணுவத்திலும் சோசியல் மீடியாக்களுக்கு கட்டுப்பாடு; சி.ஐ.எஸ்.எஃப் அறிவிப்பு!

நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களை கருத்தில் கொண்டு இந்திய துணை ராணுவத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சமீபகாலமாக ராணுவத்தில் பணிபுரிவோர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதன் மூலம் தகவல்கள் திருடப்படுவதான புகார்கள் உலகில் பல நாடுகளில் எழுந்துள்ளன. இதனால் அமெரிக்காவில் கப்பற்படை வீரர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்தவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய துணை ராணுவ படைகளில் ஒன்றான சி.ஐ.எஸ்.எஃப்-ல் 1 லட்சத்து 62 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு வீரர்களாக இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சி.ஐ.எஸ்.எஃப் தலைமையகம் பாதுகாப்பு வீரர்களுக்கு புதிய விதிமுறைகளை விதித்துள்ளது.

அதன்படி துணை ராணுவ வீரர்கள் தாங்கள் எந்தெந்த சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளனர் மற்றும் அதன் ஐடி விவரங்கள் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் ஒரு கணக்கை நீக்கிவிட்டு புதிய கணக்கு தொடங்கினாலும் மேலதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

நாட்டின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையிலோ, நாட்டின் அரசாங்க கொள்கைகளை விமர்சித்தோ பதிவுகளை, கமெண்டுகளை இட கூடாது. மீறி அவ்வாறு செய்யும் வீரர்கள் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.