1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 24 நவம்பர் 2019 (07:31 IST)

மகாராஷ்ட்ரா அரசியலில் திடீர் திருப்பம்: என்ன சொல்லப்போகிறது சுப்ரீம் கோர்ட்?

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சிவசேனாவின் தலைமையிலான ஆட்சி அமையும் என்றும் அக்கட்சியின் ஆட்சிக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுக்கும் என்றும் நேற்று முன்தினம் இரவு வரை கூறப்பட்டு வந்தது
 
ஆனால் திடீரென நேற்று காலை பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தது. முதல்வராக தேவேந்திர பட்நாயக் அவர்களும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்த அஜித்பவாரும் பதவி ஏற்றுக்கொண்டனர்
 
இந்த திடுக்கிடும் திருப்பம் சரத்பவாரை மட்டுமின்இ சிவசேனா கட்சியையும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. நாளை முதல்வர் பதவி ஏற்கலாம் என்று காத்திருந்த உத்தவ் தாக்கரே இந்த நடவடிக்கையை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தது சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரி சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரணை செய்ய வேண்டும் என்றும் இக்கட்சிகள் கோரிக்கை விடுத்தது ஆனால் இதனை மறுத்த நீதிபதிகள் இன்று காலை 11 30 மணிக்கு இந்த வழக்கை விசாரிப்பதாக அறிவித்துள்ளது 
 
இன்று காலை நடைபெறவிருக்கும் இந்த வழக்கில் விசாரணையில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பாஜக முதல்வருக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட் ஒரு வாய்ப்பு கொடுக்கும் என்றும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி முதல்வர் பட்னாவிஸ் தனது மெஜாரிட்டியை நிரூபித்து விடுவார் என்றும் பாஜக தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்