ஹேமமாலினியின் கன்னம் போல இருக்கு சாலை! – வாய் விட்டு சிக்கிய சிவசேனா எம்.எல்.ஏ!
சாலையின் தரத்தை நடிகை ஹேமமாலினியின் கன்னத்தோடு ஒப்பிட்டு பேசிய சிவசேனா எம்.எல்.ஏவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மகராஷ்டிரா மாநிலத்தின் குடிநீர் விநியோகத்துறை அமைச்சராகவும், ஜல்காவ் தொகுதி எம்.எல்.ஏவுமாக இருப்பவர் குலாப்ராவ் பாட்டீல். சமீபத்தில் ஜல்காவ் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர் “எனது அரசியல் போட்டியாளர்களும், 30 ஆண்டுகளுக்கும் மேல் எம்.எல்.ஏவாக இருப்பவர்களும் கூட என தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளின் தரத்தை பார்க்க வேண்டும். அவர்களுக்கு ஹேமமாலினியின் கன்னம் போன்ற சாலைகளை பிடிக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என பேசியுள்ளார்.
நடிகை ஹேமமாலினி தற்போது பாஜக கட்சியின் எம்.பியாக பதவியில் உள்ள நிலையில் அவரது கன்னத்தை ஒப்பிட்டு சிவசேனா எம்.எல்.ஏ பேசியது பாஜகவினரின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.