வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (09:54 IST)

உறவுக்கு அழைத்த கணவன்; உறுப்பை அறுத்த மனைவி! – மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!

மத்திய பிரதேசத்தில் உடல் உறவுக்கு வற்புறுத்திய கணவனின் பிறப்பு உறுப்பை மனைவி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் திகம்நகர் மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான இளைஞருக்கும் அதே வயதுடைய இளம்பெண்ணுக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணம் ஆன சில நாட்களிலேயே இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு எழுந்த நிலையில் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

பின்னர் பெரியவர்கள் இருவரையும் சமாதானம் செய்து மீண்டும் சேர்த்து வைத்துள்ளனர். இருவரும் சேர்ந்து வாழ்ந்தாலும் அடிக்கடை சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சமீபத்தில் கணவன் தனது மனைவியோடு உடலுறவு மேற்கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அதற்கு இளம்பெண் மறுத்துள்ளார். அதை மீறியும் கணவன் உறவு மேற்கொள்ள முயன்றதால் ஆத்திரமடைந்த மனைவி கணவனின் பிறப்பு உறுப்பை வெட்டியுள்ளார்.

இதனால் கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.