செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 15 டிசம்பர் 2021 (06:57 IST)

சர்வதேச விமான போக்குவரத்து தொடங்குவது எப்போது? மத்திய அமைச்சர் தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது என்பது தெரிந்ததே. 
 
இதனை அடுத்து சர்வதேச விமான போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது திடீரென ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா அவர்கள் இதுகுறித்து கூறிய போது ஒமிக்ரான் வைரஸ் தொற்று நிலைமையை பொறுத்து தான் சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை செய்ய முடியும் என்று கூறியுள்ளார்
 
மற்ற அமைச்சர்களுடன் ஒருங்கிணைந்து ஆலோசனை செய்து இன்னும் 2 வாரத்தில் சர்வதேச விமான சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்