புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (10:23 IST)

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு முன் கூட்டியே பதிவு - விமான நிலையங்களில் கெடுபிடி!

நாடு முழுவதும் உள்ள 6 சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டு நெறி முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருவது மனித குலத்திற்கே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம், தென்னாப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில நாட்களுக்கு முன் நுழைந்து விட்டது. 
 
இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 6 சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டு நெறி முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு... 
 
1. ஒமிக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு முன் கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும். 
2. ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு முன் கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும் என்பது வரும் 20 ஆம் தேதி முதல் கட்டயாமாக்கப்படுகிறது. 
3. விமான நிலையங்களில் சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு பரிசோகனைகளை நிறைவேற்றும் பொறுப்பு அந்தந்த விமான போக்குவரத்து நிறுவனங்களது.