திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 2 ஜூன் 2021 (21:15 IST)

மணிர்தனம் பெயரில் போலி சமூக வலைதள கணக்கு...சுஹாஷினி எச்சரிக்கை

இந்திய சினிமாவில்  முன்னணி இயக்குநர் மணிரத்னம். இவரது 65 அது பிறந்தநாளை முன்னிட்டு  அவருக்கு ரசிகர்களும், திரை நட்சத்திரங்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய சினிமாவில் அனைத்து சினிமா நட்சத்திரங்களும் நடிக்க விரும்புவார்கள் என்றால் அது மணிரத்னம் படம்தான்.

இயக்குநர்களிலேயே சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்றவர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் வெளியான இதயக் கோவில், அக்னிநட்சத்திரம், நாயகன், தளபதி, ரோஜா, குரு, அலைபாயுதே, தில்ஷே, ராவணன், காற்று வெளியிடை, உள்ளிட்ட பல படங்களை இயக்கி இந்திய சினிமாவை உலக சினிமா ரீதியாக உயர்த்தியவர் அவர்.

அவர் தற்போது, பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் இந்தியாவில் மிகப்பெரிய பட்ஜெட் படமாகும். தற்போது கொரொனா தொற்றால் இப்படம் ஷுட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் ஷீட்டிங் தொடங்கும் என தெரிகிறது.

இயக்குநர் மணிரத்னம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு  அவருக்கு ரசிகர்களும், திரை நட்சத்திரங்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் அவர்களின் பெயரில் போலி டுவிட்டர் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. இதை அறிந்த அவரது மனைவியும் நடிகையுமான சுஹாஷினி எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: ஒருவர் மணிரத்னம்  பெயரில் போலி அக்கவுண்ட் உருவாக்கியுள்ளார். இதைப் பகிருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.