திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (10:13 IST)

எந்த நாட்டில் பிரச்சனை என்றாலும் முதலில் உதவி செய்வது இந்தியா தான்.. போலந்தில் பிரதமர் மோடி பேச்சு..!

Modi Speech
எந்த நாட்டில் எந்த பிரச்சனை வந்தாலும் முதலில் உதவி செய்வது இந்தியா தான் என்றும் இந்தியர்கள் இரக்க குணம் கொண்டவர்கள் என்றும் போலந்து நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி பேசி உள்ளார்.

போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் மோடி சென்றுள்ள நிலையில் நேற்று அவர் போலந்து சென்றார். அங்கு இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி பேசிய போது ’இரக்க குணம் என்பது இந்தியர்களின் அடையாளங்களில் ஒன்றாகும் என்றும் எந்த நாட்டில் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் முதலில் உதவி செய்யும் நாடு இந்தியா தான் என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த நேரத்தில் போர் தேவையில்லாத ஒன்று என்றும், நாம் சவால்களை எதிர்கொள்ள ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் உலக நாடுகளுக்கு நட்புறவு நாடாக திகழும் இந்தியா நிரந்தர அமைதி நிலவுவதையே விரும்புகிறது என்றும் பேசி உள்ளார்.

மேலும்  உலக நலனுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய பிரதமர் ஓடி இந்தியா அனைத்து நாடுகளின் நல்வாழ்வை பற்றி சிந்திக்கிறது மற்றும் நெருக்கடி காலங்களில் உதவி செய்கிறது, குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோய்களின் போது இந்தியா   மற்ற நாடுகளுக்கு உதவி செய்தது என்றும் தெரிவித்தார்.

Edited by Mahendran