வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (15:55 IST)

உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் மோடி.! போர் பாதிப்பு குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி விளக்கம்.!!

Modi
போலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு உக்ரைன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  
 
2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் போலாந்து சென்றார். 45 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக போலாந்து சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார். போலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இதனை தொடர்ந்து போலாந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டூடாவையும், மோடி சந்தித்து பேசினார்.
 
போலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ரயில் மூலம் உக்ரைன் புறப்பட்டு சென்றார். தலைநகர் கீவ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உக்ரைனில் வாழும் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.

Ukraine Modi
அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு:
 
உக்ரைன் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ரஷியா உடனான போரில் உக்ரைனில் ஏற்பட்ட பாதிப்புகள்  குறித்த காணொளி காட்சிகளை பிரதமர் மோடிக்கு அதிபர் ஜெலன்ஸ்கி திரையிட்டு காண்பித்தார். மேலும், போரால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் அதிபர் ஜெலன்ஸ்கி விளக்கினார்.

 
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.