திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 13 மார்ச் 2022 (12:50 IST)

அனைத்து பள்ளிகளிலும் இலவச நாப்கின் இயந்திரம்! – சிக்கிம் அரசு அறிவிப்பு!

பள்ளி மாணவர்களிடையே மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இலவச நாப்கின்கள் வழங்க உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள் குறித்து அனைவருக்கும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பலரின் கோரிக்கையாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் சிக்கிம் அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக சிக்கிமில் உள்ள 210க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தானியங்கி நாப்கின் எந்திரங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிக்கிம் அரசின் இந்த திட்டத்திற்கு பெண்ணிய ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.