வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 7 டிசம்பர் 2018 (09:43 IST)

மேகதாது அணை திட்டம் ...தமிழக அரசின் அனுமதி தேவையில்லை : சித்தராமையா பிடிவாதம்.

காவிரி நதியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தாராமையா கூறியுள்ளது கடும் விவாதத்திற்குள்ளாகி வருகிறது.
காவிரி நதியின் குறுக்கே மேகதாது  என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு  ரூ.5000 கோடு ஒதுக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இத்திட்டத்திற்கான அனுமதியையு மத்திய அரசிடம் வாங்கிவிட்டது.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் நேற்று மாலை தமிழக சட்ட சபையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டுவதற்கு கடுமையாக  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் கர்நாடக  முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா,  முன்னாள் நீர்வள அமைச்சர்கள் , சட்ட அமைச்சர்களுடன் அவர் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டார்.
 
அப்போது சித்தராமையா பல்வேறு ஆலோசனைகளை முதல்வர் குமாரசாமிக்கு வழங்கியதாக தெரிகிறது.
 
அதில், மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை. தமிழகம் அரசியல் செய்வதற்காகவே இப்பிரச்னையை கிளப்புகிறது. ஒருவேளை இவ்விவகாரம் உச்ச நீதிமன்றத்திறகு சென்றால் கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் உரிய விவரங்களை சமர்பிக்க வேண்டும். இவ்வாறு  அவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.