செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 28 நவம்பர் 2018 (20:15 IST)

அனைத்து கட்சி கூட்டமா? திமுக தோழமை கட்சி கூட்டமா?

மேகதாது அணை கட்டும் ஆய்வுக்கு இன்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து இந்த அனுமதிக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக தமிழகத்திற்கு வஞ்சம் செய்வதாக எதிர்க்கட்சிகளும், மேகதாது அணை குறித்த ஆய்வுக்கு மட்டுமே அனுமதி, அணை கட்ட அனுமதி இருக்காது என்றும் பாஜகவும் கூறி வருகின்றன.

இந்த நிலையில் மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என திமுக இன்று காலை அறிவிப்பு செய்தது. ஆனால் பெயருக்குத்தான் அனைத்து கட்சி கூட்டம், அதிமுக, அமமுக, பாமக, பாஜக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளுக்கு அழைப்பே இல்லை என கூறப்படுகிறது. ஆக இந்த கூட்டத்தில் திமுக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவின் தோழமை கட்சிகளை மட்டும் கூட்டுவதற்கு பெயர் அனைத்து கட்சி கூட்டமா? என அரசியல் நோக்கர்கள் இந்த கூட்டத்தை விமர்சனம் செய்து வருகின்றனர்.