புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (10:00 IST)

’அவன் மீது பாசம் என்பதால் அறைந்தேன்” ..உதவியாளர் கன்னத்தில் அறைந்த வைரல் வீடியோ: சித்தராமையா விளக்கம்

தனது உதவியாளரை கன்னத்தில் அறைந்த விவகாரம் குறித்து சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமையா கடந்த 4 ஆம் தேதி அன்று மைசூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து திரும்பிய போது, அவரது உதவியாளர் செல்ஃபோன் ஒன்றை சித்தராமையாவிடம் நீட்டினார்.

அதில் ஒரு அதிகாரியிடம் பேசச்சொல்லி கொடுத்திருக்கிறார். அப்போது திடீரென சித்தராமையா உதவியாளர் கன்னத்தில் பளார் என அறைந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இது குறித்து சித்தராமையா தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த பதிவில், ”உதவியாளர் நடனஹல்லி ரவி என்னுடைய மகனை போன்றவர். நீண்ட காலம் நான் அவருக்கு வழிகாட்டியாக உள்ளேன்.

ஆதலால் அடிக்கடி என்னுடைய பாசத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்துவேன். அந்த பாசமிகுதியால் தான் அன்று அப்படி நடந்துகொண்டேன்” என விளக்கம் அளித்துள்ளார்.