செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2019 (16:33 IST)

அமலாக்கத்துறையினரிடம் சரணடைய தயார்.. ப சிதம்பரம் தரப்பில் வாதம்

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ப சிதம்பரம், அமலாக்கத்துறைனரிடம் சரணடைய தயார் என அவரது தரப்பு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டார் ப சிதம்பரம். பின்பு 4 முறை காவல் நீட்டிக்கப்பட்டது. இதனிடையே அமலாக்கத்துறையினரால் தொடுக்கப்பட்ட வழக்கில் ப சிதம்பரம் தரப்பில் அளிக்கப்பட்ட மேல் முறையீட்டு ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனால் அமலாக்கத்துறை ப சிதம்பரத்தை கைது செய்வதற்கு எந்த தடையும் இல்லை.

இந்நிலையில் ப சிதம்பரம் அமலாக்கத்துறையினரிடம் சரணடைய தயார் என நீதிமன்றத்தில் அவரது தரப்பு வாதிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.