திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஜனவரி 2020 (12:22 IST)

மதுரையில் மரத்தில் மோதிய கார் - அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் மரணம் !

மதுரை அருகே நடந்த விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் வெங்கடேசன் மரணமடைந்துள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து வரும் விஜயபாஸ்கருக்கு தனி உதவியாளராக இருந்தவர் வெங்கடேசன். இவர் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனது தாயாரை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட வைத்து வெற்றி பெற செய்துள்ளார்.

இதையடுத்து உள்ளாட்சி மறைமுக தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை சந்தித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கரை விஜயபாஸ்கரைத் திருச்சி விமான நிலையத்தில் விட்டு விட்டு சென்னை திரும்பும் போது, கிளிக்குடி என்ற ஊரருகே அவரது கார் எதிர்பாராத விதமாக புளியமரம் ஒன்றில் மோதியது. இதில் வெங்கடேசனும் ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பியுள்ளனர்.