செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 23 ஏப்ரல் 2022 (09:01 IST)

Covishield Production STOPPED: கடந்த டிசம்பரோடே முடிந்ததா?

கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் பணியை கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியே நிறுத்திவிட்டோம் என சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தகவல். 

 
இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டாக அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுமக்களுக்கு சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. 
 
இந்நிலையில் ஏற்கனவே தயாரிகப்பட்ட 20 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் விற்பனையாகாமல் கையிருப்பில் உள்ளதாக கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை நிறுத்தியுள்ளதாக சீரம் நிறுவனம் தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக விற்பனையை அதிகரிக்க கோவிஷீல்ட் தடுப்பூசி 600 ரூபாயிலிருந்து 225 ரூபாய் என குறைக்கப்பட்டது. 
இது தொடர்பாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறியதாவது, தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து விற்பனையும் குறைந்துள்ளது. இதனால் அதிக அளவில் தடுப்பூசிகள் எங்களிடம் தற்போது கையிருப்பில் உள்ளது.
 
எனவே கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் பணியை கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியே நிறுத்திவிட்டோம். விற்பனையாகாத 20 கோடி தடுப்பூசிகளை இலவசமாக வழங்கவும்  முன் வந்துள்ளோம் என குறிப்பிட்டார்.