செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (17:29 IST)

இரண்டாவது நாளாக எகிறிய பங்குச்சந்தை: எஸ்பிஐ பங்கு வைத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நேற்று 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பது தெரிந்ததே. நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்யாததால் பங்குச்சந்தை எகிறியது என்பதும் 2 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த 10 ஆண்டுகளில் பட்ஜெட் நாளில் அதிக அளவு பங்கு சந்தை உயர்ந்தது நேற்று தான் என்பது ஒரு சாதனையாக உள்ளது. இந்த நிலையில் இன்று 2-வது நாளாக பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1197 புள்ளிகள் உயர்ந்து கிட்டத்தட்ட 50 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக பாரத ஸ்டேட் வங்கி பங்கு 7% உயர்ந்துள்ளதை அடுத்து அந்த பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் பங்கு ஒரே நாளில் 7 சதவீதம் உயர்ந்துள்ளது பங்குச்சந்தை நிபுணர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
அதேபோல் அல்ட்ராடெக் சிமெண்ட் பங்கு விலை 6.7 சதவீதம் உயர்ந்து விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடிக்குமா? அல்லது பங்குச் சந்தையில் திருப்பம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்