செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 1 பிப்ரவரி 2021 (18:14 IST)

மத்திய அரசு ஒரு லாலிபாப்-ஐ கொடுத்து ஏமாற்றியுள்ளது: பட்ஜெட் குறித்து முக ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தல் வருவதை அடுத்து தமிழக மக்களுக்கு லாலிபாப் கொடுத்து மத்திய அரசு ஏமாற்றியுள்ளது என இன்று தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்
 
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று காலை நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பல அரசியல் தலைவர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் சற்று முன் இந்த பட்ஜெட் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதை அடுத்து தமிழக மக்களுக்கு மத்திய அரசு ஒரு லாலிபாப் கொடுத்து ஏமாற்றியுள்ளது. தமிழக திட்டங்களுக்கு ஆக்கபூர்வமான நிதி ஒதுக்கீடு மத்திய அரசு செய்யவில்லை என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். முக ஸ்டாலினின் இந்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது