செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 8 மே 2020 (11:52 IST)

தனிநபர் கடன், வணிககடன், வீட்டு கடன்: புதிய அறிவிப்புகளை வெளியிட்ட எஸ்பிஐ

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் பெரும் பொருளாதாரப் பிரச்சினைகள் இருக்கும் நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் மூன்று அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு தங்களது வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது 
 
முதல் அறிவிப்பாக பொதுமக்களுக்கு தற்போது அவசர தேவைக்காக பணம் வேண்டும் என்பதற்காக தனிநபர் கடன் திட்டத்தை மிகக் குறைந்த வட்டியில் வழங்க முடிவு செய்துள்ளது. அதாவது வெறும் 10.5 சதவீத வட்டியில் தனிநபர் கடன் கொடுக்க உள்ளதாகவும் இந்த கடனை ஒரே ஒரு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் வெறும் 45 நிமிடத்தில் 5 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அது மட்டுமின்றி ஆறு மாதத்திற்குப் பிறகே இ.எம்.ஐ கட்ட  ஆரம்பித்தால் போதும் என்றும் அறிவித்துள்ளது 
 
இரண்டாவதாக வீட்டுக் கடனுக்கான எம்.சி.எல்.ஆர் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆண்டுக்கு 7.40 சதவீதமாக இருந்த எம்.சி.எல்.ஆர் இனி 7.2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டுக்கடனுக்கான மாதத்தவணை வெகுவாக குறையும் என்றும் கூறப்படுகிறது
 
மூன்றாவதாக மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களை பாதுகாக்கும் வகையில் ’எஸ்பிஐ வீகேர் டெபாசிட்’ என்ற பெயரில் ஒரு சிறப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக மூத்த குடிமக்கள் டெபாசிட் செய்தால் அவர்களுக்கு மற்றவர்களைவிட 0.30% அதிக வட்டி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பாரத ஸ்டேட் வங்கியின் இந்த மூன்று அறிவிப்பால் ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்