வெற்றி தோல்வி சகஜம் தான், ஆனால்.. இந்தியா-இங்கிலாந்து போட்டி குறித்து சசிதரூர்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை கூட நான் பொருட்படுத்தவில்லை, ஆனால் வெற்றிக்கு முயற்சி கூட செய்யவில்லை என்பதை தான் நான் பொருட்படுத்துகிறேன் என காங்கிரஸ் பிரமுகர் சசி தரூர் கூறியுள்ளார்.
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 169 என்ற இலக்கை வெகு எளிதாக விக்கெட் இழப்பின்றி 16 ஓவர்களில் இங்கிலாந்து அணி அடித்து முடித்தது
இதனையடுத்து இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் மோத உள்ளன. இந்த போட்டி குறித்து காங்கிரஸ் பிரமுகர் சசிதரூர் தனது டுவிட்டரில் இந்தியா தோல்வி அடைந்ததை கூட நான் பொருட்படுத்தவில்லை, வெற்றியும் தோல்வியும் சகஜம் தான். ஆனால் இந்திய அணி வெற்றிக்காக போராட வில்லை என்பதையே நான் பொருட்படுத்துகிறேன் என்று கூறினார்
Edited by Mahendran