திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2022 (20:48 IST)

சரத்பவாருக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி!

sarath bhavar
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் குமார் அவர்களுக்கு தற்போது 81 வயதாகும் நிலையில் அவருக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அவரது கட்சியின் அறிக்கை தெரிவித்துள்ளது 
 
சரத்பவார் அவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதாகவும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
நவம்பர் 2ஆம் தேதி வரை அவர் மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் அதனை அடுத்து நவம்பர் 4 , 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் மருத்துவமனைக்கு வெளியே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட வேண்டாம் என்றும் சரத் பவார் நலமுடன் இருக்கிறார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran