வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : திங்கள், 24 அக்டோபர் 2022 (15:12 IST)

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்ட ரவீந்தரன்… அதிர்ச்சி தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா புரொடக்‌ஷன் ரவீந்தரன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா புரொடக்‌ஷன் ரவீந்தரன் புதிதாக ஒரு இசை ஆல்பத்தில் நடிக்க உள்ளார். நடிகை வனிதாவின் திருமணம் குறித்து கருத்து சொல்லி அவரோடு மோதலில் ஈடுபட்டு பிரபலமானவர் தயாரிப்பாளர் ரவீந்தரன். அதன் பின்னர் அவர் வனிதாவோடு சமாதானம் ஆகி யுட்யூப் சேனலை தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார்.

இதற்கிடையில் அவர் சீரியல் நடிகை மகாலெட்சுமியை மணந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலம் ஆனார். இந்நிலையில் இப்போது அவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு அவருக்கு தலை தீபாவளி என்பது குறிப்பிடத்தக்கது.