அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு?
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீரென காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சமீபத்தில் தொலைகாட்சி படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றார்
அப்போது அவரது காலில் திடீரென இரும்பு பட்டதால் ரத்தம் வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அமிதாப்பச்சனை மருத்துவமனையில் அனுமதித்தனர்
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும் இதனை அடுத்து அவர் இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
Edited by Siva