திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2019 (19:16 IST)

வயசானா என்ன? ஜெயில் உணவு சாப்பிட முடியாதோ... சிதம்பரத்திற்கு செக்!

ப.சிதரம்பதத்திற்கு வீட்டில் இருந்து உணவு வழங்க அனுமதிக்க முடியாது சிறை உணவுதான் சாப்பிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிபிஐ காவல் முடிந்து தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று அவர் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. 
 
ஜாமீன் மனு விசாரணையின் போது ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், சிதம்பரத்திற்கு 74 வயதாகிறது என வயது முதுமையை சுட்டிக்காட்டி ப.சிதம்பரத்திற்கு வீட்டில் இருந்து உணவு வழங்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 
அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஓம் பிரகாஷ் சவுதாலா ஆகியோர் அரசியல் கைதிதான் வயது முதிர்ந்தவர்கள்தான் என்பதை குறிப்பிட்டு ப.அசிதம்பரத்திற்கு மட்டும் பாரபட்சம் காட்ட முடியாது என்றார்.
 
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், ப.சிதம்பரதத்திற்கு வீட்டில் இருந்து உணவு வழங்க அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.