வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 3 மே 2024 (07:55 IST)

பாலியல் புகாரில் சிக்கியவருக்கு எம்பி சீட்.. மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் கண்டனம்..!

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்.பி. ப்ரிஜ்பூஷனின் மகன் கரன் பூஷனுக்கு பாஜக சார்பில் சீட் வழங்கியது குறித்து மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
நாங்கள் அனைவரும் எங்கள் தொழிலை பணயம் வைத்து, வெயிலிலும் மழையிலும் பல நாட்கள் தெருக்களில் தூங்கினோம். இன்று வரை ப்ரிஜ் பூஷன் கைது செய்யப்படவில்லை. நாங்கள் எதையும் கோரவில்லை. நீதியை மட்டுமே கோருகிறோம்.
 
கைது செய்வதை விடுங்கள், இன்று ப்ரிஜ் பூஷனின் மகனுக்கு சீட் கொடுத்து நாட்டின் கோடிக்கணக்கான மகள்களின் மன உறுதியை உடைத்துள்ளீர்கள் என்று சாக்‌ஷி மாலிக் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
 
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜக எம்பியும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்தனர். பிரிஜ்பூஷன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்கள், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
Edited by Siva