தொடர்புடைய செய்திகள்
- மொத்த பட்ஜெட்டில் பாதி படத்தை மட்டுமே எடுத்துள்ள படக்குழு – பிரபாஸ் அதிருப்தி!
- அடுத்த கட்டத்தை எட்டிய தனுஷ் & செல்வராகவன் கூட்டணி!
- வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது முடக்கம்
- தகனம் செய்யப்படும் கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள்: பிரச்சனை எழுப்பும் ஜாகிர் நாயக்
- இங்கிலாந்து ஆல்ரவுண்டருக்கு கொரோனா – இலங்கையில் நடக்குமா தொடர்?
தாஜ்மஹாலில் காவிக் கொடி நாட்ட முயன்ற நான்கு பேர் கைது – பரபரப்பு சம்பவம்!
தாஜ்மஹாலில் நான்கு பேர் காவிக் கொடியை நட்டு வைத்து கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு உண்டானது.
தாஜ்மஹாலை கட்டியது ஷாஜகான் என அனைருக்கும் தெரியும். அதுவும் இதனை தனது மனவி மும்தாஜ்ஜின் நினைவாக கட்டினார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. உலகம் முழுவதும் காதல் நினைவுச் சின்னமாக தாஜமஹால் போற்றப்பட்டு வருகிறது. உலகின் 7 அதிசயங்களில் தாஜ்மஹாலும் ஒன்று.
ஆனால் இங்கு இருந்த சிவன் கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் தாஜ்மஹால் எழுப்பப்பட்டது என சிலர் கூறி வருகின்றனர். மேலும் அந்த கோயிலுக்குள் சென்று தாங்கள் வழிபட அனுமதி அளிக்கவேண்டும் என்றும் கூறிவருகின்றனர். இந்நிலையில் இப்போது தாஜ்மஹாலுக்கு பார்வையாளர்கள் போல வந்த சிலர் காவிக்கொடியை நட்டுவைத்து ஹர ஹர மகாதேவ் என்றவாறு கோஷம் எழுப்பியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு செய்த சோனு பகேல், சுசில் குமார் மற்றும் ரிஷி லாவண்யா எனும் இளம்பெண் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
