செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 ஜனவரி 2021 (17:16 IST)

நடிகை சித்ராவின் கணவர் மீண்டும் கைது !

மருத்துவப் படிப்பில் சேரச் சீட்டு வாங்கித் தருவதற்காகப் பண மோசடி செய்தததாக நடிகை சித்ராவின் கணவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மீண்டும்  கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் சின்னத்திரை நடிகை ஒரு நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது அவரது கணவர் ஹேமந்தை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கைது செய்துள்ளனர் போலீஸார்.

சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா நட்சத்திர விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சித்ராவின் சாவில் மர்மம் உள்ளதாக சித்ராவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் கோட்டூர்புரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உடற்கூராய்வுக்கு பிறகு மருத்துவர்கள் அளித்த அறிக்கையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டுதான் இறந்தார் என்று உறுதியாகியுள்ளதாக நசரத் பேட்டை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சித்ராவின் கணவர் ஹேமந்த் உள்ளிட்டோரிடம் விசாரித்ததில் ஹேமந்த் அடிக்கடி மது அருந்திவிட்டு சித்ராவிடம் சண்டையிட்டதும், படப்பிடிப்பு தளத்திற்கே வந்து சண்டையிட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் சித்ராவின் தாயார் விஜயாவும் சித்ராவுக்கு பிரச்சனை கொடுத்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், சின்னத்திரை நடிகை ஒரு நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் சமீபத்தில் அவரது கணவர் ஹேமந்தை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கைது செய்தனர் போலீஸார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சித்ராவின் கணவர் ஹேமந்த் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சித்ரா மரணம் குறித்து அவருடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி சித்ரா மரணம் குறித்து ஆர்டிஓ விசாரணையும் சமீபத்தில் தொடங்கியது . சித்ரா மரணம் தொடர்பாக விசாரணையை முடித்த ஆர்டிஓ 16 பக்க அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

சித்ரா உடன் தொடர்புடையவர்கள் 15 பேரிடம் விசாரணை நடத்தி போலீசாரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வரதட்சனை கொடுமையால் சித்ரா தற்கொலை செய்யவில்லை எனவும் அந்த அறிக்கையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் மருத்துவப் படிப்பில் சேரச் சீட்டு வாங்கித் தருவதற்காகப் பண மோசடி செய்தததாக நடிகை சித்ராவின் கணவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மீண்டும்  கைது செய்துள்ளனர்.

படிப்பில் சேரச் சீட்டு வாங்கித் தருவதற்காக கூறி ஒரு கோடியே 5லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஹேமந்த் மீது ஜெஜெ நகர் போலீஸ் ஸ்டேஷனில் 2015 ஆம் ஆண்டு பண மோசடி , கொலை ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது .

மேலும் இவ்வழக்கு மத்திய குற்றப்பிரிவினருக்கு மாற்றப்பட நிலையில் இப்பண மோசடி தொடர்பாக ஏற்கனவே சிறையில் இருக்கும்  ஹேமநாத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மீண்டும் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.