புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 22 ஜூலை 2021 (09:21 IST)

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது!

சபரிமலை ஐயப்பன் கோவில் பூஜையின் நிறைவு நாளில் கலச பூஜை நடைபெற்று, நடை சாத்தப்பட்டது. 

 
சபரிமலை ஐயப்பன் கோவில் ஆடி மாத பூஜைக்காக கடந்த 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில், முதல் நாள் மட்டும் 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மற்ற நாட்களில் 10,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
 
இதனைத்தொடர்ந்து நேற்று பூஜையின் நிறைவு நாளில் கலச பூஜை நடைபெற்று, நடை சாத்தப்பட்டது. மேலும், ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகைக்காக அடுத்த மாதம் 15 ஆம் தேதி கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.