செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2019 (23:05 IST)

அபிநந்தன் விடுதலை: பிரபல தலைவர்கள் வாழ்த்து

பாகிஸ்தான் பிடியில் இருந்து விடுதலையாகி இன்று இரவு இந்தியாவுக்குள் வந்து சேர்ந்த இந்திய வீரர் அபிநந்தனை வரவேற்க வாகா எல்லையில் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்த நிலையில் அவருடைய விடுதலை குறித்தும், துணிச்சல் குறித்தும் பிரபல தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். அதுகுறித்து தற்போது பார்ப்போம்
 
பிரதமர் மோடி: அபிநந்தனின் துணிச்சலை கண்டு நாடே பெருமை கொள்கிறது.. -  
 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: அபிநந்தனின் கண்ணியம், வீரம் நம் எல்லோரையும் பெருமைபட வைத்துள்ளது. அபிநந்தன் நாடு திரும்பியதை மிகுந்த அன்புடன் வரவேற்கிறோம்
 
பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்:அபிநந்தனை எண்ணி நாடே பெருமைப்படுகிறது; அபிநந்தன் இந்திய இளைஞர்களுக்கு உத்வேத்தை ஏற்படுத்தியுள்ளார்; வீரமும், தீரமும் நிறைந்தவர் அபிநந்தன்!"
 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: நாடு திரும்பிய அபிநந்தனை நாட்டு மக்களுடன் இணைந்து நானும் வரவேற்பதில் மகிழ்ச்சி
 
பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்: அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டதன் மூலம் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிந்தது வரவேற்புக்குரியது. இரு நாடுகளும் மீண்டும் அமைதிக்கான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்