புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (18:18 IST)

கொரோனா தொற்றால் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிவாரணம் - மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29,974ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்தியாவில் கொரோனாவில் இருந்து 7,027 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை  937 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் உள்ள துறைமுகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கொரொனா பாதிப்பால் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த இழப்பீடு, ஒப்பந்த பணியாளர்களுக்கும், இதர பணிகளுக்கான ஊழியர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிவரை அமலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.