திருப்பதி கோவிலில் நாளை ரூ.300 டிக்கெட் ஆன்லைனில் கிடைக்கும்: தேவஸ்தானம் அறிவிப்பு

tirupathi
திருப்பதி கோவிலில் நாளை ரூ.300 டிக்கெட் ஆன்லைனில் கிடைக்கும்
siva| Last Updated: செவ்வாய், 15 ஜூன் 2021 (22:19 IST)
திருப்பதி கோவிலில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பக்தர்களின் வருகை குறைந்து வந்த நிலையில் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் அதிலும் ரூபாய் 300 சிறப்பு கட்டணத்தில் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி புதிய அறிவிப்பு ஒன்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது: திருப்பதி கோவிலில் 22 ,23, 24
தேதிகளுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்கள் என 15 ஆயிரம் டிக்கெட்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவிப்பு
செய்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :