1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 மார்ச் 2025 (15:16 IST)

90ஸ் கிட்ஸின் பேவரிட் ஷோவின் கதாசிரியர் மறைந்தார்! - ரசிகர்கள் அஞ்சலி!

Courage the cowardly dog

பிரபலமான கார்ட்டூன் தொடர்களை எழுதிய கார்ட்டூன் கதாசிரியர் டேவிட் ஸ்டீவ் கோஹன் புற்றுநோயால் காலமானார்.

 

90ஸ் கிட்ஸின் மறக்க முடியாத கார்ட்டூன் தொடர்களில் ஒன்று Courage The Cowardly Dog. மிகவும் அமானுஷ்யமான அதே நேரத்தில் சிரிக்கவும் வைக்கக்கூடிய இந்த கார்ட்டூன் தொடரை பயந்து கொண்டே பார்த்த 90ஸ் கிட்ஸ் ஏராளம். இந்த தொடரின் கதைகளை எழுதிய ஹாலிவுட் கார்ட்டூன் கதாசிரியர் டேவிட் ஸ்டீவ் ஹோகன்.

 

இதுமட்டுமல்லாமல், Alf, Peg+Cat, ALF Tales என பல கார்ட்டூன் தொடர்களுக்கு கதையாசிரியராக பணியாற்றியுள்ள டேவிட் ஸ்டீவ் ஹோகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார், இந்நிலையில் மாச்ர் 17 அன்று தனது 58வது வயதில் காலமானார்.

 

அவரது மறைவையொட்டி பதிவிட்டுள்ள கார்டூன் நெட்வொர்க் அவரது கார்ட்டூன் பங்களிப்பை பற்றி விவரித்து அஞ்சலி செலுத்தியுள்ளது. தங்களது பால்ய காலங்களை கார்ட்டூனால் அலங்கரித்த அவருக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K