தொடர்புடைய செய்திகள்
- வேலூர் சிக்கியப் பணம் – துரைமுருகன் நண்பரிடம் தீவிர விசாரணை !
- கோடி கோடியாக ரெய்டுப் பணம் – என்ன சொல்கிறார் துரைமுருகன் ?
- கட்டு கட்டாக சிக்கியப் பணம் – வேலூரில் தேர்தல் நடக்குமா ?
- கட்டம் கட்டிய ஐடி ரெய்ட்; கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்; கடுப்பான துரைமுருகன்!
- மூட்டை மூட்டையாக வேலூர் சிமெண்ட் குடோனில் சிக்கிய பணம்: முக்கிய புள்ளிக்கு தொடர்பா?
சப்பாத்திக்குள் ரூ.2000: நூதன முறையை அம்பலப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் விடிய விடிய சோதனை செய்து பல வகைகளில் யோசித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் தேர்தல் ஆணையத்தை விட பலமடங்கு அரசியல்வாதிகள் யோசித்து வருகின்றனர்.,
திருமங்கலம் பார்முலாவில் வினோத முறையில் மக்களிடம் பணத்தை கொண்டு போய் சேர்த்தது போல் தற்போது புதுசு புதுசாக பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்க அரசியல்வாதிகள் யோசித்து வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் சப்பாத்திக்குள் பணத்தை வைத்து கொடுப்பது.
சப்பாத்தி மாவை உருட்டும்போதே அதில் ரூ.500, ரூ.2000 என வைத்து பின்னர் அதை சப்பாத்தியாக்கி வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. சப்பாத்தியை இரண்டாக பிரித்தால் அதில் ரூ.2000 இருக்கும்.
இந்த வினோத முறையை கர்நாடகாவை சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது டுவிட்டரில் வீடியோவாக வெளியிட்டு இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுங்கள் என்று தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளார். இவர்தான் சசிகலா சிறையில் சொகுசாக இருந்ததை அம்பலப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது
Ingenious ways of luring voters...
— D Roopa IPS (@D_Roopa_IPS) April 1, 2019
Concerned authorities may kindly take note. pic.twitter.com/iiJtQe1JjG
அடுத்த கட்டுரையில்
