செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (11:20 IST)

ஒரு கிலோ எடை குறைத்தால் ரூ.1000 கோடி நிதி..! – சவாலை ஏற்று சாதித்த எம்.பி!

Anil Firojiya
உடல் எடையை குறைத்தால் தொகுதி வளர்ச்சி நிதியை தருவதாக மத்திய அமைச்சர் சொன்னதை சீரியஸாக எடுத்துக் கொண்டு உடல் எடையை குறைத்துள்ளார் மத்திய பிரதேச எம்.பி.

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினி தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் அனில் பிரோஜியா. இவர் தனது தொகுதியின் வளர்ச்சிக்காக நிதி அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அப்போது அனில் பிரோஜியாவின் உடல் எடையை சுட்டிக்காட்டிய நிதின் கட்கரி எடையை குறைத்தால் நிதி தருவதாக சொன்னாராம்.

இதை சவாலாக ஏற்ற எம்.பி அனில் பிரோஜியா தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டு 15 கிலோ எடையை குறைத்துள்ளாராம். இதுகுறித்து பேசியுள்ள எம்.பி அனில் பிரோஜியா “எனது உடல் எடையை குறிப்பிட்டு ஒரு கிலோ குறைத்தால் ரூ.1000 கோடி தொகுதி வளர்ச்சிக்கு நிதி அளிப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். அதை சவாலாக ஏற்று 15 கிலோ எடை குறைத்துள்ளேன். அவர் சொன்னது போல நிதியை வழங்க கோரிக்கை விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.