வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 13 ஜூன் 2022 (12:25 IST)

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு!

rupees
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு!
 கடந்த சில நாட்களாகவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில் இன்று வரலாறு காணாத அளவில் சரிந்து வந்ததாக வெளிவந்திருக்கும் செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று பங்குச்சந்தை தொடங்கியவுடன் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு ஏற்பட்டது. சற்றுமுன் ஒரு அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 78 ரூபாய் 29 காசுகளாக வர்த்தகமாகி வருகிறது
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை 77ஐ தாண்டாத நிலையில் முதல் முறையாக 78 ரூபாய்க்கும் அதிகமாக இருப்பது பெரும் சரிவாக காணப்படுகிறது 
 
இதே ரீதியில் சென்றால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 100 ரூபாய்க்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என பொருளாதார வல்லுனர்கள் கணித்து வருகின்றனர்