புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 30 மே 2022 (15:54 IST)

தேசிய அரசியலா?.. தமிழ்நாடு அரசியலா? அன்புமணி விளக்கம்

Anbumani
பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி சமீபத்தில் பாமகவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்பதை பார்த்தோம்
 
 இந்தநிலையில் பாமகவின் புதிய தலைவராக உள்ளதால் அவர்தான் பாமக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் அவர் எம்பியாக இருப்பதால் தேசிய அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார் 
 
இந்த நிலையில் பாமக தலைவர் ஆன பின் தமிழக அரசியலில் கவனம் செலுத்துவீர்களா அல்லது தேசிய அரசியலில் கவனம் செலுத்தினீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அன்புமணி, ‘தமிழகம் சார்ந்த தேசிய அரசியலில் கவனம் செலுத்துவேன் என்று கூறியுள்ளார்
 
 மேலும் தமிழகத்தை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடாமல் மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு வளர்ச்சிக்கான இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்