1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2023 (12:08 IST)

இன்று முதல் ரூ.2000 நோட்டை வாங்க மாட்டோம்: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம்

இன்று முதல் 2000 ரூபாய் நோட்டை வாங்க மாட்டோம் என பெட்ரோல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. 
 
செப்டம்பர் 30-ம் தேதிக்கு முன் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் நாளை மறுநாள் உடன் கால அவகாசம் முடிவடைய இருக்கும் நிலையில் நேற்று முதல் பேருந்துகளில் பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் நோட்டை வாங்க வேண்டாம் என்று போக்குவரத்து கழகம் அறிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் இன்று முதல் 2000 ரூபாய் நோட்டை வாங்க மாட்டோம் என  பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran