வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : சனி, 30 செப்டம்பர் 2023 (10:16 IST)

2000 ரூபாய் நோட்டு இன்னும் வைத்திருக்கிறீர்களா? இன்றே கடைசி..!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது என்பதும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. 
 
இந்த அவகாசம் இன்றுடன் முடிவடைவதை அடுத்து 2000 ரூபாய் நோட்டில் கையில் யாராவது வைத்திருந்தால் உடனடியாக இன்று மாலைக்குள் வங்கி சென்று 2000 ரூபாய் நோட்டை கொடுத்து மாற்றிவிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 
 
மேலும் 2000 ரூபாய் நோட்டை வங்கியில் கொடுத்து மாற்றுவதற்கான கால அவகாசம் நீடிக்கப்படாது என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
 
எனவே இன்றே கடைசி நாள் என்பதால் வங்கி அல்லது ஏடிஎம் டெபாசிட் இயந்திரங்களில் மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஏற்கனவே 90% சதவீதத்திற்கும் மேலாக 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியிடம் திரும்ப வந்துவிட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran