1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 16 ஜூலை 2022 (21:56 IST)

விமானத்தில் எந்திரம் பழுது....விமானியின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய பயணிகள்!

Flight
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு வந்த விமானம்  ஒன்று பழுதான  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேற்றூ மாலை ஏர் அரேபியா விமானம் கேரளா மா நிலம் கொச்சிக்கு வந்துகொண்டிருந்தது.

அந்த விமானத்தில் 222 பயணிகள் இருந்தனர்.  நேற்றிரவு கொச்சியில் 7:13 மணிக்கு தரை இறங்க வேண்டும் என்ற நிலையில்,  கொச்சியை   நெருங்கியபோது, விமானத்தின் ஹைற்றாலிக் எந்திரம் செயல்படாமல் போனது.

சுதாரித்துக் கொண்ட விமானி, உடனே கொச்சி விமானத்திற்கு தகவல் தெரிவிதார்.  பின்னர், விமானத்தின் அவசர பாதுகாப்பு எந்திரங்கள் உதவியுடன் விமானத்தின் உதவியுடன் பழுதைச் சரிசெய்ய  முயன்றனர்.

பின்னர், 16 நிமிடங்கள் தாமதமாக கொச்சி விமானத்தில் தரையிறங்கியது விமான,  விமானியின் சாமத்தியத்தை அனைவரும் பாராட்டினர்.