வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (10:12 IST)

வியட்நாம் போகலாமா? ரூ.26தான் டிக்கெட்..! – விமான நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!

Vietjet
இந்தியாவிலிருந்து வியட்நாம் செல்ல ரூ.26 தான் டிக்கெட் கட்டணம் என விமான நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது வைரலாகியுள்ளது.

வியட்நாமை தலைமையாக கொண்டு உலகம் முழுவதும் பல விமானங்களை வியட்ஜெட் (Vietjet) நிறுவனம் இயக்கி வருகிறது. ஆண்டின் 7வது மாதம் 7ம் தேதியை (7/7) சிறப்பிக்கும் விதமாக சிறப்பு ஆஃபர் ஒன்றை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி வியட்ஜெட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்திலும் 7ம் தேதி முதல் 7 நாட்களுக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு டிக்கெட் விலை ரூ.26 மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.

வியட்ஜெட் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 77777 விமானங்கள் செயல்பட்டு வரும் நிலையில் 7ம் எண்ணை சிறப்பிக்கும் வகையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாம்.