'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கான 'நர்கீஸ் தத்' விருது
அக்னிஹோத்ரி இயக்கத்தில், அனுபர் கேர், பாஷா சும்பில், பல்லவி ஜோஷி ஆகியோர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான தி காஷ்மீர் ஃப்பைல்ஸ்’ படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கான'நர்கீஸ் தத்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான 69 ஆவது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் யாருடைய படம் தேசிய விருது பெறப் போகிறது, யார் யார் தேசிய விருது பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் சினிமா கலைஞர்களும், ரசிகர்களும் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று மாலை சினிமாவுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், திரையரங்குகளில் வெளியாகி சர்ச்சைகளை சந்தித்த ‘தி காஷ்மீர் ஃப்பைல்ஸ்’ படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அரசியல் மற்றும் சினிமாத்துறையினர் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், அனுபர் கேர், பாஷா சும்பில், பல்லவி ஜோஷி ஆகியோர் நடிப்பில் கடந்தாண்டு இப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.