1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 26 ஆகஸ்ட் 2023 (19:37 IST)

'ஜெய்பீம்' படத்திற்கு எப்படி விருது வழங்குவார்கள்? பிரகாஷ்ராஜ் டுவீட்

jaibhim
சமீபத்தில், திரைப்படங்களுக்கு மத்திய  அரசின் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதில், புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், காஷ்மீர் பைல்ஸ், கடைசி விவசாயி உள்ளிட்ட பல படங்கள் இடம் பெற்றிருந்தன.

இதில், சூர்யா நடிப்பில்  டி.ஜே.ஞானவேல்ராஜா இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் படத்திற்கு விருது கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், விருது கிடைக்கவில்லை. இதுபற்றி சினிமா கலைஞர்கள், சினிமா விமர்சகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த  நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இதுபற்றி தன் டுவிட்டர் பக்கத்தில்,

''காந்தியைக் கொன்றவர்கள்,  இந்திய அரசியலமைப்பை தந்த  அம்பேத்கரின் சமத்துவ   தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு எப்படி விருது தருவார்கள்? என்று கேள்வி பதிவிட்டுள்ளார்.