வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (08:45 IST)

'' உடனே ஒரு சகோதரன் வேண்டும்'' - மகளுக்காக குழந்தையை கடத்திய தம்பதி கைது!

சலையோரமாக வசித்து வந்த ஒரு மாதக் குழந்தையைக் கடத்தி வந்தது தொடர்பாக சஞ்சய் –அனிதா தம்பதியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில்  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள சலையோரமாக வசித்து வந்த ஒரு மாதக் குழந்தையைக் கடத்தி வந்தது தொடர்பாக  சஞ்சய் –அனிதா தம்பதியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் வசித்து வரும் சஞ்சய்-அனிதா தம்பதியர்க்கு ஒரு மகள் உள்ளார். இவர்களின் மகன் கடந்த ஆண்டு உயிரிழந்ததால் இதுபற்றிய சோகத்தில் அவர்கள் இருந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், ரக்ஷா பந்தனுக்கு ராக்கி கட்ட  ஒரு சகோதரன் வேண்டும் என்று சஞ்சயின் மகள் அடம்பிடித்திருக்கிறாள். எனவே, சஞ்சய்- அனிதா தம்பதியர், சாலையோரம் வசித்து வந்த ஒரு மாதக் குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளனர்.

தங்கள் குழந்தையைக் காணவில்லை என்று குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி கட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் சஞ்சய் மற்றும் அவரது மனைவி குழந்தையை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.