1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Reliance jio introduced new mobile phone

ரூ.1000க்கும் குறைவாக ஜியோவின் 4G மொபைல் அறிமுகம்! யூபிஐ மூலம் பணம் செலுத்தலாம்..!

ஜியோ
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ரூபாய் 999க்கு 4ஜி மொபைல் அறிமுகம் செய்ய இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ அவ்வப்போது தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையை அறிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் ரூபாய் 999க்கு ஜியோவின் 4ஜி மொபைல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜூலை 7ஆம் தேதி இந்த மொபைல் அறிமுகமாக இருப்பதாகவும் ஜியோ பாரத் போன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த போனின் ஆரம்ப விலை ரூ.999 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த போனில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனை வாங்குபவர்களுக்கு 30% குறைவான விலையில் மொபைலுக்கு ரீசார்ஜ் பிளான்களும் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு: மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி..!