செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2021 (17:38 IST)

மோடி பேர் ஓகே.. அதென்ன ரிலையன்ஸ் எண்ட்? அதானி எண்ட்? – நெட்டிசன்கள் கேள்வி!

குஜராத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்டுள்ள நிலையில் அதன் இரு முனைகளுக்கும் ரிலையன்ஸ், அதானி என பெயர் வைக்கப்பட்டுள்ளது கேள்வியை எழுப்பியுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கிரிக்கெட்டுக்காக உலகிலேயே பிரம்மாண்டமான பெரிய மைதான் உருவாக்கும் பணிகள் நடைபெற்றன.

குஜராத் மாநிலம் அகமதாப்பாத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட மைதானத்திற்கு நரேந்திர மோடி மைதானம் என பெயரிடப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.

இதுவரை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானமே உலகின் பெரிய மைதானமாக இருந்த நிலையில் அதை மொட்டேரா மைதானம் பின்னுக்கு தள்ளியுள்ளது. இந்நிலையில் இங்கு இன்று இந்தியா – இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் நடந்து வருகிறது.

இந்நிலையில் மைதானத்தின் இரு பக்க பிட்ச் முனைகளுக்கும் ரிலையன்ஸ் எண்ட், அதானி எண்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் இந்த பெயர்கள் இடம்பெறவும் அதை போட்டோ எடுத்த நெட்டிசன்கள், மைதானத்திற்கு பிரதமர் மோடி பெயர் வைத்ததற்கு காரணம் உள்ளது. ஆனால் ஏன் ரிலையன்ஸ் எண்ட்? அதானி எண்ட்? என பெயர் வைக்கப்பட்டுள்ளது என்ற ரீதியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.