1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2021 (13:49 IST)

படேல் மைதான் இனி நரேந்திர மோடி மைதானம்! – பிரம்மாண்ட மைதானத்திற்கு பெயர் மாற்றம்!

குஜராத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குஜராத் கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான படேல் கிரிக்கெட் மைதானம் இருந்த பகுதி விரிவுப்படுத்தப்பட்டு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கட்டப்பட்டுள்ளது. 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று இந்த மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சர்தார் வல்லபாய் படேல் மொட்டேரா மைதானம் என்ற இந்த மைதானத்தின் பழைய பெயர் மாற்றப்பட்டு நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. குஜராத்தில் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்து சிறப்பாக வழிநடத்தியதற்காக அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் இந்த திடீர் பெயர் மாற்றத்திற்கு எதிர்கட்சிகளிடையே எதிர்ப்பும் எழுந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.